Monthly Archives: July 2011

டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம்

கூலித் தொழிலாளியாக இருந்த ஆவடியை சேர்ந்த தேவேந்திரன், இன்று டாக்டராகி, திறமைக்கு வறுமை தடையில்லை என்பதற்கு, வாழும் உதாரணமாக திகழ்கிறார். சென்னை ஆவடி, காமராஜர் நகரை சேர்ந்த சிவசங்கர் பார்க் டவுனில், ஒரு பாத்திரக் கடையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இவரின் மூத்த மகன் தேவேந்திரன். விடுமுறை காலத்தில் கூலித் தொழிலாளியாக இருந்து, தன் … Continue reading

( 1 ) Comment

வயது 90 ஆனால் என்ன? 4ம் வகுப்பு தேர்வு எழுதி அசத்திய மூதாட்டி

படிக்க வசதியிருந்தும், நல்ல உடல் ஆரோக்கியம் இருந்தும் கல்வி கற்காமல் இருக்கும் பல பேருக்கு இடையே வயது 90ஐ எட்டியும், உடல் தளர்ந்தும் கூட, மனம் தளராமல் நான்காம் வகுப்பு தேர்வு எழுதிய மூதாட்டியை பலரும் பாராட்டி வருகின்றனர். கேரளாவில் ஒரு மூதாட்டி நான்காம் வகுப்பு தேர்வு எழுதி பலரது பாராட்டை பெற்று அசத்தி உள்ளார். … Continue reading

Leave a comment

இடது கையை இழந்த ஜூடோ வெற்றி வீரன் நிகிடோ!

ஜப்பானில், டொக்கியோவில் வசித்து வந்து பத்து வயது சிறுவன் நிகிடோ, கார் விபத்து ஒன்றில் தனது இடது கையை இழந்தவன். ஆனால் அவனுக்கு ஜூடோவில் மிகுந்த ஆர்வம் இருந்ததால், ஒரு மாஸ்டரை அணுகி ஜூடோ கற்றுக் கொள்வதற்கான தனது விருப்பத்தைத் தெரிவித்தான். அவரும், அவனைத் தனது சீடனாக ஏற்றுக் கொண்டு, ஜூடோ கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். … Continue reading

Leave a comment

எட்டாம் வகுப்பு தேர்வை எழுதிய 60 வயது பெண்

தாராபுரத்தை சேர்ந்த 60 வயது ரத்னாம்பாள், எட்டாம் வகுப்பு தனித்தேர்வை ஆர்வமுடன் எழுதி வருகிறார். இவரது ஆர்வத்தை ஆசிரியர்கள் பலரும் பாராட்டினர். எட்டாம் வகுப்பு தனித்தேர்வு, கடந்த 7ம் தேதி முதல் நடந்து வருகிறது; இன்று அறிவியல் பாடத்தேர்வு நடக்கிறது. திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று சமூக … Continue reading

Leave a comment

படித்தேன்… சாதித்தேன் – முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி

முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி: என் அப்பாவின் பணி நிமித்தம் காரணமாக, பல ஊர்களிலும் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எட்டாம் வகுப்பை திருச்சியிலும், ஒன்பதாம் வகுப்பை குஜராத் பரோடாவிலும் படித்தேன். பெங்களூரு ஜோசப் பள்ளியில் பிளஸ் டூ முடித்தேன். அதே ஊரில் ஜோசப் கல்லூரியில், பி.ஏ., சேர்ந்தது என் வாழ்வில் திருப்பு முனையாக … Continue reading

Leave a comment

ஏழ்மை எனக்கு தடை அல்ல – கால்பந்தாட்ட வீராங்கனை வரலட்சுமி

என் சொந்த ஊர் புதுச்சேரியில் உள்ள திருக்கனூர். நான் புதுச்சேரி கதிர்காமம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறேன். பள்ளிக்காக தினமும் 50 கிலோ மீட்டர் பயண நேரம் தவிர மற்ற நேரங்களில் கால்பந்தாட்ட பயிற்சி தான் பொழுது போக்கு. பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் செந்தில் சார், கால்பந்தாட்ட வீரர் என்பதால், எனக்கு … Continue reading

Leave a comment

நம்பிக்’கையால் வெற்றி பெற்ற நிக்

அந்த இளைஞருடைய பெயர் நிக். இருபத்தெட்டு வயது. நடக்கிறார், சிரிக்கிறார், பேசுகிறார், வாசிக்கிறார், கால்ஃப் விளையாடுகிறார். கீழே விழுகிறார், மீண்டும் அவரே சிரமப்பட்டு எழுந்து நிற்கிறார்… கொஞ்சம் பொறுங்க சார். 28 வயது ஆள் இதையெல்லாம் செய்யறது ஒரு பெரிய விஷயமா? இதைப்போய் மகா அதிசயம் மாதிரி சொல்ல வந்துட்டீங்களே! அதிசயம்தான் சார். இவ்வளவையும் சர்வசாதாரணமாகச் … Continue reading

( 1 ) Comment

வியாபாரத்தில் வெற்றி பெற்ற பள்ளி மாணவி

கஷ்டம் என்னை பக்குவப்படுத்தியது!’ பள்ளிப் படிப்பை முடிக்கும் முன்பே தொழில் முனைவோர் ஆன ஜோதி: நான் ஐந்தாவது படிக்கும் போதே ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்று ஆசை இருந்தது. பத்தாவது படிக்கும் போதே, விபத்தில் அப்பா இறந்துவிட, நான் என் அம்மா, அக்கா, மூவரும் நிலைகுலைந்து போனோம். கண்ணீருடன் பொதுத் தேர்வு எழுதினேன். அதில் 91 … Continue reading

Leave a comment

ஆர்வத்தால் சாதித்த ஆர்க்கிமிடீஸ்

குளத்தில் சிறு கல் ஒன்றைப் போட்டால் அது தண்ணீருக்குள் மூழ்கிவிடுகிறது. ஆனால், மிகப் பெரிய கப்பல் தண்ணீரில் மிதப்பதை நாம் பார்க்கிறோம். இதற்குக் காரணம் என்ன? இந்த உண்மையை முதன் முதலில் கண்டறிந்தவர்தான் ஆர்க்கிமிடீஸ் எனும் விஞ்ஞானி. ஆர்க்கிமிடீஸ் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு கணித மேதை. இவர், இத்தாலி நாட்டைச் சேர்ந்த … Continue reading

Leave a comment

விவேகானந்தரின் வெற்றி கதை

கோல்கட்டாவில்,விஸ்வநாத தத்தர்- புவனேஸ்வரி அம்மையாரின் தவப்புதல்வரறாக, 1863, ஜனவரி 12ல் அவதரித்தார். நரேந்திரன் என பெயர் இட்டனர். வடமொழி, ஆங்கில நூல்கள் பலவற்றைக் கற்று ஆன்மிக ஞானம் அடைந்தார். ராமகிருஷ்ண பரமஹம்சர் அவரைத் தனது சீடராக ஏற்றுக்கொண்டார். துறவியான பிறகு அவருக்கு வந்த பெயர் விவேகானந்தர். விவேகம் இருந்தால் தான் ஆனந்தம் பிறக்கும் என்பதைத் தன் … Continue reading

Leave a comment