சாதனைப் பெண்மணிகள்…

* பத்து பல்கலைக்கழகங்களிலிருந்து டாக்டர் பட்டம் பெற்ற பெண்மணி குஜராத்தைச் சேர்ந்த இலா பட் என்பவராவார். இவர் பெற்ற உயரிய விருதுகள் மகசேச விருது, பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகளாகும்.

* அதிக வயதில் அண்டார்டிகா சென்று சாதனை புரிந்த பெண்மணி என்ற பெருமையைப் பெற்றவர் கமல் வில்க என்பவராவார். இவர் தனது 53-வது வயதில் அண்டார்டிகா சென்றார்.

* இங்கிலாந்திலுள்ள ஏறுவதற்கு கடினமான மலையான ஹாரிஸôன் மலையில் ஏறி சாதனை புரிந்த முதல் பார்வையற்ற பெண்மணி காஞ்சன் காபா என்ற இந்தியப் பெண் ஆவார்.

* தனது வாழ்நாளில் 1,140 கோப்பைகள், 125 கேடயங்கள், வென்ற அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனை செரில் மில்லர்.

* 1988-ல் நடைபெற்ற மாராத்தான் நீச்சல் போட்டியில் தனது 13-வது வயதில் 29 கி.மீ. தூரத்தை 9 மணி 5 நிமிடத்தில் நீந்திக் கடந்து சாதனை படைத்தார் அர்ச்சனா பாரத் குமார் என்ற இந்திய நீச்சல் வீராங்கனை.

* 19 வயதில் உலக அளவில் பளு தூக்கும் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கம் பெற்ற முதல் இந்திய வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி.

* ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் 1976 ஒலிம்பிக் முதல் தொடர்ந்து நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்ற முதல் பெண்மணி இரெனகா சிவின்ஸ்கா என்பவராவார்.

* கேரம் விளையாட்டின் முதல் உலக மகளிர் சாம்பியன் பட்டம் பெற்றவர் அனு ராஜ். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.

* ரங்கோலி கோலம் போடுவதில் உலக சாதனை புரிந்து கின்னஸில் இடம் பெற்ற முதல் பெண் என்ற பெருமை பெற்றவர் தமிழகத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி மோகன்.

* உலகிலேயே இளம் வயதில் செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை பெறுபவர் ஜூடிட் போல்கர் என்ற ஹங்கேரி நாட்டு பெண்ணாவார். இவர் தனது 16-வது வயதில் இந்தச் சாதனையைப் புரிந்தார்.

* ஐ.நா.சபையின் முதல் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஜயலட்சுமி பண்டிட் ஆவார். இவர் 1953-ல் இப்பதவி வகித்தார்.

* கோல்ப் கிளப் சாம்பியன்ஷிப் பட்டத்தை அதிக முறை வென்ற முதல் பெண் மாரஜோரி எடி என்ற கனடா நாட்டு பெண்மணியாவார்.

* எட்டு முறை ஆஸ்கார் விருது பெற்ற முதல் பெண்மணி எடித் ஹெட் ஆவார்.

* ஒலிம்பிக்கின் முதல் வீராங்கனை என்ற சிறப்பு பெற்றவர் பேனி டுரக் என்ற ஆஸ்திரேலிய நாட்டுப் பெண்.

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday Kondattam&artid=560648&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>